மும்பை திராவிடத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக
உலக மகளிர் நாள்
தாராவியில் சிறப்பாக நடைபெற்றது
மும்பை திராவிடத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை
(08.03.2015) மாலை 7 மணி அளவில் தாராவியில் உள்ள மும்பை திமுக அலுவலக வளாகத்தில் உலக மகளிர் நாள் விழா நடைபெற்றது.
கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கருஞ்சட்டைத் தமிழர் இதழின் துணை ஆசிரியரும், தென்னரசு மாத இதழின் பொறுப்பாசிரியருமான எழுத்தாளர் இரா.உமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகளிர் நாள் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் ந. நம்பிராஜன் வரவேற்புரை ஆற்ற பாவலர் முகவைத் திருநாதன் தொடக்கவுரை ஆற்றினார். மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் த. விக்னேஷ்வரன், கு. யாமினிஸ்ரீ ஆகியோர் மகளிர் நாள் குறித்து மிகச் சிறப்பாக பேசி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றனர்.
மேலும் ப. மிக்கேல் அந்தோணி, கு. ஆறுமுகப் பெருமாள், மீனாட்சி முத்துக்குமார் உள்ளிட்டோர் மகளிர் நாள் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகளை பேராசிரியர் சமீரா மீரான் தொகுத்து வழங்கினார். இறுதியாக கவிஞர் வ.இரா. தமிழ்நேசன் நன்றியுரை ஆற்றினார். வெ.ம. உத்தமன், பி. கிருஷ்ணன், கவிஞர் வதிலை பிரதாபன், பெ. கணேசன், வெ.சதானந்தன், க. ஆறுமுகப் பாண்டியன், அ.இரவிச்சந்திரன், க. இராசன், பணகுடி சண்முகவேல், எம். அலி முகமது, என்.வி.சண்முகராசன், ஜான் சாமுவேல், இறை.ச. இராஜேந்திரன், அண்ணா கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கோகிலா, சின்னம்மாள், ராஜேஸ்வரி, பிரவினா, கோமலா அம்மாள், கலாவதி, முத்து தர்ஷினி உள்ளிட்ட பெண்களும் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
