Sunday, June 17, 2018

நவிமும்பை தமிழ்ச் சங்கத்தில் பட்டி மன்றம்


கவியரசு கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா?, காதலா?...

நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தில் 2018, ஜூன் 16 அன்று மாலை மழைக்கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டிமன்றம் நடைபெற்றது. 
கவியரசு கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா?, காதலா ? என்ற பொருளில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சமீரா மீரானும்,  தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் அமைப்பாளரும் கல்வியாளருமான திருமதி அமலா ஸ்டான்லியும் ’காதலே” என்ற அணியில் பேசினார்கள். மும்பையின் பிரபல பட்டி மன்ற பேச்சாளர் திருமதி புவனா வெங்கட்டும், தமிழர் நட்புறவுப் பேரவையின் தலைவர் கவிஞர் குணாவும் ”தத்துவமே” என்ற அணியில் வாதிட்டார்கள். தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல பட்டிமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வரும் பிரபல சொற்பொழிவாளர் புலவர் இராமலிங்கம் நடுவராக பொறுப்பேற்று பட்டிமன்றத்தை வழிநத்தினார்.  நகைச்சுவை பொங்க அவர் பேசியதும் சொன்ன செய்திகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவருக்கு அடுத்து பார்வையாளர்களின் அதிகமான கரவொலிகளை திருடிக்கொண்டவர் புவனா வெங்கட்தான். அமலா ஸ்டான்லியும், கவிஞர் குணாவும் தர்க்கரீதியாக தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். தத்துவங்களின் மூலம் காதலைத்தான் கண்ணதாசன் வலியுறுத்தினார் என்று அமலா ஸ்டான்லியும், காதல் பாடல்கள் அனைத்துமே தத்துவங்களின் வெளிப்பாடுதான் என்றார் கவிஞர் குணா.  நிறைவாக ’கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலே!’ என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக தமிழர்கள் வருகை தந்திருந்தனர்.       
பட்டிமன்ற ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மிகச் சிறப்பாக  செய்திருந்தனர்.

Sunday, June 10, 2018

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் இரண்டாம் ஆண்டுவிழா


பத்லாபூர்  தமிழர்  நலச்  சங்கம் இரண்டாம் ஆண்டுவிழா பத்லாபூர்  கிழக்கு,  மோகன் பாம்ஸ், பென்டுல்கர்  மங்கள் காரியாலயா அரங்கில் நடைபெற்றது.

       தலைவர்,  கருவூர்  இரா. பழனிச்சாமி தலைமையில் நடந்த விழாவில் முர்பாத் சட்டமன்ற உறுப்பினர் கிசன் கத்தோரே, பத்லாபூர்கேபிஎம்சி  முன்னாள் தலைவர் கவுன்சிலர் ராஜேந்திர கோர்படே, கவுன்சிலர் திருமதி ராஜஸ்வரி ஞானேஷ்வர் கோர்படே, அபூர்வா கெமிகல் உரிமையாளர் திருமதி சண்முக சுந்தரி கண்ணன், தானே பெடரல் வங்கி துணைத் தலைவர்  பாலமுருகன், தமிழ் எழுத்தாளர் மன்ற பொதுச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பை மாநில தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், புலவர் பாலையா, திரு ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கலை  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு  பரிசுக் கோப்பைகளும்,  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச குறிப்பேடுகள் ( நோட் புக்ஸ்) வழங்கப்பட்டது.

இணைச்செயலாளர் ஜெ. எபினேசர் வரவேற்புரையாற்ற, இணைச்செயலாளர்  சரோஜா உதய்குமார் தொகுத்து வழங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர்கள் எஸ். அருணாச்சலம், எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஞானபிரகாசம் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் திருமதி மீனாட்சி வெங்கட், அ. அகஸ்டின், டி.செங்குட்டுவன், டி. வெங்கடேசன், கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Thursday, March 12, 2015

மும்பை திராவிடத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக 
உலக மகளிர் நாள்
தாராவியில் சிறப்பாக நடைபெற்றது

மும்பை திராவிடத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.03.2015) மாலை 7 மணி அளவில் தாராவியில் உள்ள மும்பை திமுக அலுவலக வளாகத்தில் உலக மகளிர் நாள் விழா நடைபெற்றது. 
கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கருஞ்சட்டைத் தமிழர் இதழின் துணை ஆசிரியரும், தென்னரசு மாத இதழின் பொறுப்பாசிரியருமான எழுத்தாளர் இரா.உமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகளிர் நாள் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் ந. நம்பிராஜன் வரவேற்புரை ஆற்ற பாவலர் முகவைத் திருநாதன் தொடக்கவுரை ஆற்றினார். மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் வாழ்த்துரை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் த. விக்னேஷ்வரன், கு. யாமினிஸ்ரீ ஆகியோர் மகளிர் நாள் குறித்து மிகச் சிறப்பாக பேசி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றனர்.
மேலும் ப. மிக்கேல் அந்தோணி, கு. ஆறுமுகப் பெருமாள், மீனாட்சி முத்துக்குமார் உள்ளிட்டோர் மகளிர் நாள் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகளை பேராசிரியர் சமீரா மீரான் தொகுத்து வழங்கினார். இறுதியாக கவிஞர் வ.இரா. தமிழ்நேசன் நன்றியுரை ஆற்றினார். வெ.ம. உத்தமன், பி. கிருஷ்ணன், கவிஞர் வதிலை பிரதாபன், பெ. கணேசன், வெ.சதானந்தன், க. ஆறுமுகப் பாண்டியன், அ.இரவிச்சந்திரன், க. இராசன், பணகுடி சண்முகவேல், எம். அலி முகமது, என்.வி.சண்முகராசன், ஜான் சாமுவேல், இறை.ச. இராஜேந்திரன், அண்ணா கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

கோகிலா, சின்னம்மாள், ராஜேஸ்வரி, பிரவினா, கோமலா அம்மாள், கலாவதி, முத்து தர்ஷினி உள்ளிட்ட பெண்களும் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Sunday, October 12, 2014

நகைச்சுவை மன்றத்தின் சார்பாக நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் நடைபெற்ற  பட்டிமன்ற  நிகழ்ச்சி குறித்த செய்தி

Saturday, October 11, 2014

மும்பை நகைச்சுவை மன்றத்தின் சார்பாக நடைபெறவுள்ள பட்டிமன்ற நிகழ்ச்சி குறித்து தினகரன் (மும்பை) நாளிதழில் வெளி வந்த செய்தி

Saturday, August 16, 2014









2014, ஆகஸ்டு 15 அன்று பாண்டுப் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் தேசியக கொடி ஏற்றினார்

Monday, July 7, 2014

கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலந்தாய்வுக் கூட்டம்

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலந்தாய்வுக் கூட்டம் முலுண்ட் மேற்கில் உள்ள மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் இல்லத்தில் 06.07.2014 அன்று மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது. மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் வதிலை பிரதாபன், துணைத் தலைவர் பாவலர் முகவைத் திருநாதன், செயலாளர் கருவூர் இரா. பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன், இரா. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்