கவியரசு
கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா?,
காதலா?...
நவிமும்பைத்
தமிழ்ச் சங்கத்தில் 2018, ஜூன் 16 அன்று மாலை
மழைக்கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டிமன்றம் நடைபெற்றது.
கவியரசு கண்ணதாசன் படைப்புகளில்
விஞ்சி நிற்பது தத்துவமா?, காதலா
? என்ற பொருளில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சமீரா மீரானும், தமிழ் எழுத்தாளர்
மன்றத்தின் அமைப்பாளரும் கல்வியாளருமான திருமதி அமலா ஸ்டான்லியும் ’காதலே” என்ற அணியில் பேசினார்கள்.
மும்பையின் பிரபல பட்டி மன்ற
பேச்சாளர் திருமதி புவனா வெங்கட்டும்,
தமிழர் நட்புறவுப் பேரவையின் தலைவர் கவிஞர் குணாவும் ”தத்துவமே” என்ற அணியில் வாதிட்டார்கள்.
தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல பட்டிமன்ற நிகழ்வுகளில்
பங்கேற்று வரும் பிரபல சொற்பொழிவாளர்
புலவர் இராமலிங்கம் நடுவராக பொறுப்பேற்று பட்டிமன்றத்தை வழிநத்தினார். நகைச்சுவை பொங்க
அவர் பேசியதும் சொன்ன செய்திகளும்
பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவருக்கு அடுத்து பார்வையாளர்களின் அதிகமான
கரவொலிகளை திருடிக்கொண்டவர் புவனா வெங்கட்தான். அமலா
ஸ்டான்லியும், கவிஞர் குணாவும் தர்க்கரீதியாக தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். தத்துவங்களின்
மூலம் காதலைத்தான் கண்ணதாசன் வலியுறுத்தினார் என்று அமலா ஸ்டான்லியும்,
காதல் பாடல்கள் அனைத்துமே தத்துவங்களின் வெளிப்பாடுதான் என்றார் கவிஞர் குணா. நிறைவாக ’கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலே!’ என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக தமிழர்கள் வருகை தந்திருந்தனர்.
பட்டிமன்ற ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment