உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? நூல் அறிமுக விழா

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களின் உடையும்
இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற நூலின் அறிமுக விழா மும்பை திராவிடர் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் திரு. பெ. கணேசன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (8.4.2012) மும்பையில் நடைபெற்றது. மும்பை மாநகர தி. மு. க. செயலாளர் திரு. த. மு. பொற்கோ நூலை வெளியிட தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. அலிசேக் மீரான், வழக்கறிஞ...ர் திரு. இர. இராசாமணி ஆகியோர் முதல் இரு படிகளை பெற்றுக் கொண்டனர்.
மும்பை புறநகர திமுக செயலாளர் திரு. பொ. அப்பாதுரை, தமிழ் காப்போம் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. அ. ஜெயகாண்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளரும், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற மேலாண்குழுத் தலைவருமான பேராசிரியர் சமீரா மீரான், தமிழ் இலெமூரியா திங்களிதழின் முதன்மை ஆசிரியர் திரு. சு.குமணராசன் ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள்.
மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திரு. அ. இரவிச்சந்திரன் தொடக்கவுரை ஆற்றினார். மும்பை திராவிடர் கழக செயலாளர் திரு. இ. அந்தோணி வரவேற்புரை ஆற்ற, பொருளாளர் திரு. கண்ணன் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment