Friday, April 13, 2012

'தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி'
தமிழ்ச் சிந்தனையாளர் சங்கம கூட்டத்தில்
கவிஞர் அ. ஜெயகாண்டீபன் சிறப்புரை 

தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமம் ஒவ்வொரு மாதமும் சிந்தனைக்குரிய கருத்துகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவுகளையும் கருத்தாய்வுக் கூட்டங்களையும்  நடத்தி வருகிறது . கடந்த  ஏப்ரல் 1 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 7  மணியளவில் மும்பைத் தமிழ்ச் சங்க சிற்றரங்கத்தில்  நடைபெற்ற  சங்கமத்தின் 17 ஆவது அமர்வில் தமிழ் காப்போம் அமைப்பின் தலைவரும், சிறந்த பேச்சாளருமான நல்லாசிரியர் கவிஞர் அ. ஜெயகாண்டீபன் 'தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.  பேராசிரியர் சமீரா மீரான்  வரவேற்புரையாற்ற தமிழ்ப் பள்ளி ஆசிரியர் ஆறுமுகப் பெருமாள் நன்றியுரையாற்றினார். சங்கம அமைப்பாளர் இராஜாவாய்ஸ், கவிஞர் குணா, கவிஞர் தமிழ்நேசன் கவிஞர் பரணி உள்ளிட்ட பலர் கவிஞர் ஜெயகாண்டிபனின் உரை  குறித்து   கருத்தாய்வு வழங்கினார்கள்.
வதிலை பிரதாபன், பெ. கணேசன், மிக்கேல் அந்தோணி, புலவர் அழகுமுத்து, ஜான் சாமுவேல்,  பா. உதயகுமார், கே. கலியபாபு, இரா சரவணன், சாந்தாராம், வில்பர்ட் ஜுட்,  மா. கதிரவன், நாடோடித் தமிழன், இறை. ச. இராஜேந்திரன், செ. அப்பாதுரை, அ. கண்ணன், பு. தேவராஜன், பெர்னாண்டோ, அப்பசாமி, அந்தோணி, நீலகண்டன், ஆழ்வார், சுநதரராஜ்,  காத்தவராயன், பால் வண்ணன் உள்ளிட்ட மும்பைத் தமிழ் அமைப்பினனரும், தமிழார்வலர்களும் பெருந்திரளாக  இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்
. 

No comments:

Post a Comment